இன்று எங்கள் தோழி நளினிக்கு பிறந்தநாள். நானும் ஷீலாவும் செய்திருந்த ஏற்பாட்டின்படி ஒரு கேக், முட்டை, அழுகின தக்காளி & மாஜிக் காண்டில் (உஜாலா சொட்டு நீளம் வாங்கதா மறந்துட்டோம்) எல்லாம் நேற்று இரவே தயார் செய்து வைத்திருந்தோம். சரியாக இரவு 11.45 க்கு அலாரம் வைத்து எழுந்து ஹாலுக்கு வந்து கேக்கில் மாஜிக் காண்டில் பற்ற வைத்து பின் நானும் ஷீலாவும் பொய் அவளை எழுப்பினோம். திடிரென எழுப்பியதால் கண்கள் சுருக்கி கொண்டு எங்களை பார்த்தாள். எப்படியோ எழுப்பி ஹாலுக்கு கூட்டி வந்து கேக்கை கட் செய்ய வைத்தோம். ஆனா காண்டிலை ஊத ஊத அது மீண்டும் மீண்டும் பற்றிகொள்ள அவள் எங்களை வசை பாட ஆரம்பிக்க எப்படியோ அவள் ஊதி முடிக்கவே அரை மணி நேரம் ஆனது.
அடுத்தது கேக் கட்டிங். நளினி ஒரு வழியாய் கேண்டில் ஊதி முடிச்சதும் ஆசையா கட் பண்ண போக நானும் ஷீலாவும் ரெடி ஜூட்னு ரூம்குள் ஊட முயல நளினி கேக்கில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து எங்கள் பின்னாலே ஓடி வந்து எங்களையும் இழுத்து வர ஷீலாவையும் அவள் பிடியிலேயே வைத்துக்கொண்டு கட் பண்ண அவள் பயந்தது போல் ஒன்றுமில்லாமல் போக அடப்பாவிகளா என மீண்டும் வசை பாட ஆரம்பிக்கவும் கிரீமை எடுத்து நானும் ஷீலாவும் அவள் முகத்தில் பூசுவதற்கு சரியை இருந்தது. கோபத்தில் நளினி எங்கள் மீதும் கிரீமை பூசிவிட ஒரே ரகளை ஆனது எங்கள் வீடு. பிறகு கிரீமை கழுவ நளினி பாத்ரூம் செல்ல அடுத்த அர்ச்சனைக்கு நானும் ஷீலாவும் தயார் ஆனோம். முதலில் முட்டை அபிஷேகம் அடுத்து தக்காளி என நளினிக்கு நானும் ஷீலாவும் அர்ச்சனை செய்விக்க ஏகப்பட்ட வசைகளை எங்கள் மீது அள்ளி வீசினாள். ஒரு வழியாக எல்லாம் முடித்து நானும் ஷீலாவும் தூங்க வந்தோம். குளித்து முடித்து வந்த நளினி மேலும் எங்களை திட்ட ஒரே கலாட்டவாய் எங்கள் நளினியின் பிறந்த நாள் விழா முடிந்தது. காலையிலேயே இஸ்கான்க்கு கிளம்பிவிட்டாள். நானும் ஷீலாவும் பிரியாணி செஞ்சிக்கிட்டு ஆபீஸ் வந்துட்டோம். Happy Birthday to You Dear Nalini:)



2 comments:
Hi Nalini, Many more Happy returns of the day....
It seems everyone enjoyed well... Nice arrangements Geetha... enjoy...
Hey all,
kalakittinga..
next time ennum nalla romba nalla birthday celebrate pannanum...enna..endha adi allam patthadhu.perisa plan pannunga....
geetha..konjam tarpugahchi over ah than irukku...
Post a Comment