Tuesday, June 29, 2010

வானவில்லே வானவில்லே!!!

சென்ற வார இறுதியில் பெங்கலூர்வில் இருந்து என் ஊருக்கு செல்லும் போது SETC ல் சென்றேன். பஸ் நிரம்பிவிட்டதால் என்னையும் இன்னும் இருவரையும் டிரைவர் சீட்டுக்கு பின்னாடி உக்கார வெச்சிட்டாரு கண்டக்டர். கிருஷ்ணகிரிலிருந்து தர்மபுரி செல்லும் போது வழியில் நானும் மற்ற இரு பயணிகளும், கண்டக்டர் மற்றும் டிரைவரும் மட்டுமே ரசித்த இந்த வானவில்...(மற்ற பயணிகள் அனைவரும் வசதியாக உறங்கி விட்டதாலும் இதை அவர்கள் பார்க்ககூட இல்லை)
பல வருடங்களுக்கு பிறகு நான் பார்த்த முழு வானவில் இது.






Monday, June 14, 2010

ஒரு விளையாட்டு ஒரு நட்பு...

இது நானும் என் தோழியும் ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கண்டுபிடித்த விளையாட்டு.
எங்கள் பள்ளியில் எல்லாருக்கும் பஸ் பாஸ் இருப்பதால் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பெரிய கூட்டம் பஸ் ஸ்டாப்பில் நிற்கும்.
எனக்கோ அப்போதெல்லாம் கூட்டத்தை பார்த்தாலே பயம். அதிலும் கல்லூரி அண்ணன்கள் தொங்கிக்கொட்டு ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு வரும் பேருந்தை பார்த்தால் அதைவிட பயமா இருக்கும்.
மத்தவங்கஎல்லாம் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் ஏறிக்கிட்டு போய்டுவாங்க.
நான் மட்டும் தனியா நின்னுட்டு அடுத்த பஸ்சுக்காக வெயிட் பண்ணுவ.
அப்டி ஒரு நாள் வெயிட் பண்ணும்போதுதா லில்லி-ஐ பார்த்தேன். அவளும் என்ன மாதிரியே பாவமா அடுத்த பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா. அப்போ நான் 6th A அவ 6 th B class.  நா அவளை பார்த்தப்ப அவளும் என்னை பார்த்து சிரிச்சா.
ரெண்டு பேரும் ஹாய் சொல்லி பேசிக்கிட்டோம். சாயந்திர நேரம்கரதால ரெண்டு பேருக்கும் பசி எடுத்துகிச்சு. பஸ்சும் வரவே இல்ல. சரின்னு எதிர்ல இருந்த டீ கடையில ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஊட்டி வருக்கி வாங்கி சாப்டோம். ஒரு வருக்கி ஒரு ரூபாதா. இதுக்கப்பறம் நாங்க இதா ஒரு வழக்கமாவே வெச்சிக்கிட்டோம்.
இதோ சாப்டு முடிச்சவுடனே எங்க ஊரு டவுன் பஸ் வந்துடுச்சி. காலேஜ் கூட்டமும் எங்க ஸ்கூல் கூட்டமும் இல்லாததால பஸ் காலியா வந்திச்சி. ரெண்டு பேரும் ஏறிக்கிட்டு சீட்ல உக்கந்தப்போ ஒரு ஐடியா தோணிச்சு. அதுதாங்க நாங்க கண்டுபிடிச்ச விளையாட்டு. (அப்போ அது எங்களுக்கு விளையாட்டு மாதிரி தெரிஞ்சிச்சி.)
அது என்னன்னா போற வழியில தெரியிற எதாவது ஒரு வார்த்தைய ஒருத்தர் சொல்லணும். அதாவது பஸ்சுக்கு வெளில கடைல நேம் போர்டுலாம் இருக்குமில்ல அது இல்லைனா கொஞ்சம் பெருசா கண்ணுக்கு தெரியற அளவு இருக்கற வார்த்தைகள்.
ஒருத்தர் ஒரு வார்த்தைய சொன்னா அந்த பஸ் மூவ் ஆகறதுக்குள்ள அது எங்க இருக்குனு கண்டு பிடிச்சிரனும். இப்டி ஆள் மாத்தி ஆள் ஒருத்தர் சொல்லணும் ஒருத்தர் கண்டுபிடிக்கணும்.
இதுல என்னை சந்தோசம்னா எல்லாரும் முதல் பஸ்ல எடமில்லாம நெருக்கிக்கிட்டு பசியோட போய்இருப்பாங்க...ஆனா நாங்க ஜாலியா சாப்டுட்டு அடுத்த பஸ்ல ப்ரீயா உக்காந்துக்கிட்டு விளையாடிக்கிட்டு வரோமுங்கரதுதா.
இந்த விளையாட்டுல அறிமுகமான  எங்கள் நட்பு 12 வருட நட்பா இன்னும்  தொடர்ந்துட்டு இருக்கு.
இப்போ அவ ஒரு டீச்சர்...

Tuesday, June 1, 2010

நாங்க...

நாங்க யாருன்னு கேக்கறிங்களா?
நாங்க மூணு பேர்...
கீதா லட்சுமி...அது நான்தான்...
நளினி...மிஸ் மிரர்
ஷீலா...மிஸ் ரெயின்போ
நாங்க முப்பெரும் தேவிகளும் வேல செய்யிறது ஒரே கம்பெனிலதா...
அதனால மூணுபேரும் இந்த பெங்களூருல ஒரு சின்ன வீட்ட வாடகைக்கு எடுத்து குடி இருக்கோம்.
இதுல மிஸ் ரெயின்போ B.E படிச்சு வந்ததால அவங்களுக்கு MS Class போற டென்ஷன் இல்ல. சோ வார இறுதி வந்தா போதும் பைய தூக்கிகிட்டு ஊருக்கு கெளம்பிருவாங்க.
நானும் மிஸ் மிரரும்தான் வீட்டில் அராஜக ஆட்சி.
நாங்க எது செஞ்சாலும் வீட்டு ஒனர்கு தெரிஞ்சிடும். ஏன்னா அவங்க 1st floor நாங்க ground floor  . அதுதா விசயமே:(
வீட்ல தண்ணி வராத ஒரு நாள் ஒரு tap தெரந்துயிருன்தது தெரியாம நாங்க மூணு பேரும் ஆபீஸ் போய்டோம்.
சாயந்திரம் வந்து பாத்தா வீடு தண்ணில மெதக்குது. மூணுபேரும் ஷாக் ஆகி நின்னிருந்தப்ப கரெக்டா வீட்டுக்காரங்க பாத்துட்டாங்க:(
திட்டுன்னாத்திட்டு அப்டி ஒரு திட்டுங்க.
கன்னடம் தெரியும்ங்கற ஒரே பாவத்துக்காக மொத்த திட்டும் எனக்குதா கெடச்சுது:(
அது முடிஞ்சுதா கொஞ்ச நாள்லயே ஹீட்டர் ரிப்பேர் ஆகி போய் மறுபடியும் நானேதா திட்டு வாங்கின.
இந்த மாதிரி பல பல சாகசங்கள நாங்க செஞ்சிருக்கோம்.
வீட்டுல நாங்க சமைக்கறது எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா??
நாங்க சமைச்சு முடிச்சு கெளம்பரதுக்குள்ள மணி பத்தாகிடும்.
மறுபடியும் ஆபீஸ் மறுபடியும் வீடு. சனிக்கிழமை ஆனா காலேஜ் போகணும்.
அப்பப்போ ஷாப்பிங். எப்பவாவது அஞ்சப்பர் ஹோட்டல்ல டின்னர்.
இப்டிதா எங்க லைப் போய்கிட்டு இருக்கு.

கொண்டாட்டம்

இன்று எங்கள் தோழி நளினிக்கு பிறந்தநாள். நானும் ஷீலாவும் செய்திருந்த ஏற்பாட்டின்படி ஒரு கேக், முட்டை, அழுகின தக்காளி & மாஜிக் காண்டில் (உஜாலா சொட்டு நீளம் வாங்கதா மறந்துட்டோம்) எல்லாம் நேற்று இரவே தயார் செய்து வைத்திருந்தோம். சரியாக இரவு 11.45 க்கு அலாரம் வைத்து எழுந்து ஹாலுக்கு வந்து கேக்கில் மாஜிக் காண்டில் பற்ற வைத்து பின் நானும் ஷீலாவும் பொய் அவளை எழுப்பினோம். திடிரென எழுப்பியதால் கண்கள் சுருக்கி கொண்டு எங்களை பார்த்தாள். எப்படியோ எழுப்பி ஹாலுக்கு கூட்டி வந்து கேக்கை கட் செய்ய வைத்தோம். ஆனா காண்டிலை ஊத ஊத அது மீண்டும் மீண்டும் பற்றிகொள்ள அவள் எங்களை வசை பாட ஆரம்பிக்க எப்படியோ அவள் ஊதி முடிக்கவே அரை மணி நேரம் ஆனது.

அடுத்தது  கேக் கட்டிங். நளினி ஒரு வழியாய் கேண்டில் ஊதி முடிச்சதும் ஆசையா கட் பண்ண போக நானும் ஷீலாவும் ரெடி ஜூட்னு  ரூம்குள் ஊட முயல நளினி கேக்கில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைத்து எங்கள் பின்னாலே ஓடி வந்து எங்களையும் இழுத்து வர ஷீலாவையும் அவள் பிடியிலேயே வைத்துக்கொண்டு கட் பண்ண அவள் பயந்தது போல் ஒன்றுமில்லாமல் போக அடப்பாவிகளா என மீண்டும் வசை பாட ஆரம்பிக்கவும் கிரீமை எடுத்து நானும் ஷீலாவும் அவள் முகத்தில் பூசுவதற்கு சரியை இருந்தது. கோபத்தில் நளினி எங்கள் மீதும் கிரீமை பூசிவிட ஒரே ரகளை ஆனது எங்கள் வீடு. பிறகு கிரீமை கழுவ நளினி பாத்ரூம் செல்ல அடுத்த அர்ச்சனைக்கு நானும் ஷீலாவும் தயார் ஆனோம். முதலில் முட்டை அபிஷேகம் அடுத்து தக்காளி என நளினிக்கு நானும் ஷீலாவும் அர்ச்சனை செய்விக்க ஏகப்பட்ட வசைகளை எங்கள் மீது அள்ளி வீசினாள். ஒரு வழியாக எல்லாம் முடித்து நானும் ஷீலாவும் தூங்க வந்தோம். குளித்து முடித்து வந்த நளினி மேலும் எங்களை திட்ட ஒரே கலாட்டவாய் எங்கள் நளினியின் பிறந்த நாள் விழா முடிந்தது. காலையிலேயே இஸ்கான்க்கு கிளம்பிவிட்டாள். நானும் ஷீலாவும் பிரியாணி செஞ்சிக்கிட்டு ஆபீஸ் வந்துட்டோம்.  Happy Birthday to You Dear Nalini:)