Tuesday, February 15, 2011

இதுதான் நான்..

இதுதான் நான்..


கண்கள் விழிக்கும்போது தெரியும் உன் முகம்,
எனது நாளை உன் வசம் வைத்திருக்கும்..
கணினி திரையில் தெரியும் உன் கண்கள்,
என் வேலை பதற்றத்தை குறைத்திடும்..
மிக அருகில் ஈரத்தோடு உன் இதழ்கள்,
மிகப்பிடித்த உறக்கத்தை களவாடும்..
சந்திக்கும் நேரம் முடியும்போது
பிரிவை எதிர்கொள்ள முடியாமல்
உன்மேல் நான் காட்டும் கோபம்,
அதன் காரணம் புரியாமல் நீ வாடும்போது,
என் மனம் உடைந்து போகும்..
பிடிக்காத செயலுக்காக போடும் சண்டைகளில்,
உனக்கு சரியாய் நான் பேசும் சொற்களில்
துவண்டுபோகும் உன் மனதை எதிர்கொள்ள
என்னவனே எனக்கு அவ்வளவு உறுதி இல்லை.
அதற்காகவே தோற்று போவேன் எப்போதும்..
...


8 comments:

Asiya Omar said...

மிக அருமை கீதா.கொள்ளை நிலா நிஜமாகவே மனதை கொள்ளை கொள்கிறது.

Anonymous said...

wish you a very happy new year -2012

விச்சு said...

தொடர்ந்து எழுதுங்களேன். உங்கள் எழுத்துக்கள் சுவராஸ்யமாக உள்ளன.

சசிகலா said...

காதலின் வரிகள் அருமை .

சசிகலா said...

துவண்டுபோகும் உன் மனதை எதிர்கொள்ள
என்னவனே எனக்கு அவ்வளவு உறுதி இல்லை.
அதற்காகவே தோற்று போவேன் எப்போதும்..
...ரசித்துப் படித்தேன் அருமை .

FAKURUDEEN ALI said...

கண்கள் விழிக்கும்போது தெரியும் உன் முகம்,
எனது நாளை உன் வசம் வைத்திருக்கும்..

FAKURUDEEN ALI said...

கண்கள் விழிக்கும்போது தெரியும் உன் முகம்,
எனது நாளை உன் வசம் வைத்திருக்கும்..

இராஜராஜேஸ்வரி said...

தோற்றவர் வென்றார்